தேர்தல் கால சர்ச்சைகள்: ஏ.ஐ. மூலம் கட்டுப்படுத்தும் யு-டியூப்

தேர்தல் கால சர்ச்சைகள்: ஏ.ஐ. மூலம் கட்டுப்படுத்தும் யு-டியூப்

சென்னை: மக்களவைத் தேர்தல் காலத்தில் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏ.ஐ.) உதவியுடன் சிறப்பு நடவடிக்கைகளை யு-டியூப் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சரியான தகவல்களை மட்டுமே பயன்பாட்டாளர்களுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இணையவழியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யு-டியூப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான இயக்குநர் இஷான் ஜான் சாட்டர்ஜி கூறியதாவது:

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யு-டியூப் தளத்தில் வெறுப்பு பிரசாரங்கள், மத உணர்வுகளை புண்படுத்தும் விஷயங்கள், தவறான செய்திகள் பரவாமல் தடுக்க பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அந்த வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை 22.5 லட்சம் சர்ச்சைக்குரிய விடியோக்களை நீக்கியுள்ளோம்.

தற்போது இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி சில பொறுப்புணர்வுகள் யு-டியூப் நிறுவனத்துக்கு உள்ளன. அதனை உணர்ந்து தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மக்களவைத் தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களையும், நம்பகமான செய்திகளையும் வழங்குகிறோம்.

அதன்படி, எவ்வாறு வாக்குப் பதிவு செய்வது, எவ்வாறு தேர்தலில் பங்கேற்பது என்பன தொடர்பான விளக்கப் பதிவுகள் யு-டியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இதைத் தவிர, தவறான தகவல்களையும், சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம் கண்டறியவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com