திமுகவை பற்றி மட்டுமே பேசுகிறார் பிரதமர்: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை: இந்தியாவில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடி திமுகவை பற்றி மட்டுமே பேசி வருவதாக திமுக தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

திமுக சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் வேளச்சேரி பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திமுக ஆட்சியில்தான் வேளச்சேரி பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுவது நகைப்புக்குரிய ஒன்றாகும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. காதுகள் சரியாக கேட்கும் நிலையில் இருந்திருந்தால் திமுக உறுப்பினர்கள் மக்களவையில் பேசியது எதிர்க்கட்சியினருக்கு கேட்டிருக்கும்.

இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பிரதமர் மோடி திமுக பற்றி மட்டுமே பேசி வருகிறார். பிரதமர் மோடி திமுகவின் பிரசார பீரங்கியாகவே மாறிவிட்டார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். திமுக மீதான பிரதமர் மோடியின் விமர்சனங்கள் தேர்தல் களத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com