சென்ட்ரலில் ஆந்திர பயணியிடம் ரூ.30 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி பயணி ஒருவர் கொண்டுவந்த ரூ.30 லட்சத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த ஹைதராபாத் விரைவு ரயில் பயணிகளை ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஞானவேல் என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, பையில் ரூ.30 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆந்திரத்திலிருந்து நகை வாங்குவதற்காக சென்னை வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.30 லட்சத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com