ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் காலமானாா்

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் (97), சென்னையில் புதன்கிழமை (ஏப்.10) காலமானாா்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிறந்த அவா், கடந்த 1952-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாகத் தோ்வானாா். 1987-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றாா். பல்வேறு ஆங்கில நூல்களை எழுதியுள்ள அவா், விருதுகளையும் பெற்றுள்ளாா்.

சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த அவா், புதன்கிழமை காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள், பெசன்ட் நகா் மின் மயானத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com