கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 8 பேர் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியை காண வந்த ரசிகர்களிடம் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் தீவீரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கள்ளச்சந்தையில் ஐபிஎல் போட்டி அதிக விலைக்கு விற்றதாக மயிலாப்பூரைச் சேர்ந்த கௌசி (30), திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (43), ஆந்திரத்தைச் சேர்ந்த உதயகிரண் (21), சென்னை அகரத்தைச் சேர்ந்த அழகப்பன் (44), திருச்சியைச் சேர்ந்த ராஜபாண்டி (24), திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயவேல் (23), இம்மானுவேல் (21), கொடுங்கையூரைச் சேர்ந்த சச்சின் (19) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.35,500 மதிப்புள்ள 13 ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் 7 வழக்குகளை பதிந்து, விசாரணை செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com