பிரதமரின் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அதிமுக வேட்பாளர்

பிரதமர் மோடியின் தமிழக வருகை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அதிமுக தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்தார்.

வேளச்சேரி பகுதியில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2005-ஆம் ஆண்டு வேளச்சேரி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர்ஜெயலலிதா, ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை பக்கிங்ஹாம் கால்வாய் பக்கம் திருப்பி விடும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தினார். ஆனால் திமுக அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டது.

தென் சென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு சொட்டு தண்ணீர் கூட இனிமேல் சாலைகளில் தேங்கி நிற்காது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

ஆனால், மழையின் போது வேளச்சேரி வெள்ளக்காடாக மாறியது தான் மிச்சம். மக்களின் பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மட்டுமே பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை புரிகிறார். அவரது வருகை தேர்தல் களத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com