ரூ.5 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வியாபாரிகள் கோரிக்கை

குறைந்தபட்ச ஆவணங்களுடன் ரூ.5 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோயம்பேடு வியாபாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து கோயம்பேடு வணிக வளாக காய், கனி, மலர், உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் எழுதிய கடிதம்:

கோயம்பேடு வணிகவளாகம் வியாபாரிகள் வியாபாரம் மூலம் கிடைக்கும் பணத்தை வங்கியில் செலுத்த கொண்டு செல்லும் போது, பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து விடும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று விடுகிறது.

எங்களிடம் இருக்கும் ஆவணங்களை மட்டும் வைத்து குறைந்த பட்சமாக ரூ.5 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com