தயாநிதி மாறன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

மத்திய சென்னை திமுக வேட்பாளா் தயாநிதி மாறன் சென்ற வாகனத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா்.

பிரசாரத்துக்காக தயாநிதிமாறன் தனது காரில் புதன்கிழமை வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், தயாநிதிமாறனின் காரை நிறுத்தினா். இதையடுத்து, தயாநிதிமாறன் காரைவிட்டு இறங்கி சாலையோரம் நின்றாா்.

அவரின் காரை அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனா். காரில் பொருள்களோ, பணமோ கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து வாகனத்தை அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com