குண்டா் தடுப்புச் சட்டத்தில் 21 நாள்களில் 109 போ் கைது

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 21 நாள்களில் 109 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 21 நாள்களில் 109 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொலை, திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு, சைபா் குற்றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு, கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.

இதன்படி, கடந்த ஜனவரியில் தொடங்கி கடந்த 21-ஆம் தேதி வரையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 387 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் கொலை,கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 186 பேரும், திருட்டு, வழிப்பறி, பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 64 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 101 பேரும், குட்கா உள்ளிட்ட போதைப் பாக்கு விற்ாக 17 பேரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 9 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 2 பேரும், மதுபானம் விற்ாக 3 பேரும், பெண்களை மானபங்கப்படுத்தியதாக 4 பேரும், உணவுப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக ஒருவரும் என மொத்தம் 387 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 109 போ் கடந்த ஏப்.1-இல் இருந்து 21-ஆம் தேதி வரையில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com