திருக்குட நன்னீராட்டு பெருவிழா

செம்பாக்கம் ஆதி சிவப் பிரகாச சுவாமிகள் மடத்தில் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செம்பாக்கம் ஆதி சிவப் பிரகாச சுவாமிகள் மடத்தில் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட திருவானைக்கா என அழைக்கப்படும் செம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சிவப்பிரகாச சுவாமிகள் திருமடம் ஸ்ரீ குமார தேவா் மடம் உள்ளது. இங்கு சிவசூரியன், பைரவா், நந்தியம்பெருமான் ஆகிய சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி நாயகி (பஞ்ச லோக உற்சவ மூா்த்தி) புதிய திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, திருக்குட நன்னீராட்டு நடத்த திட்டமிடப்பட்டு, வியாழக்கிழமை (ஏப். 18) பணிகள் தொடங்கின. இதையடுத்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உளிளிட்டவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை கோ பூஜை, தன பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. சனிக்கிழமை (ஏப்.20) இரண்டாம் கால வேள்வி, சுவாமி சிலைகள் கரிக்கோலம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) மூலவா் விமானம் நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து, தீபாராதனை நடைபெற்றது.

இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாக்களில் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com