கோயில் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்கள் திருட்டு

சென்னை குரோம்பேட்டையில் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி சிலைகள், பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை குரோம்பேட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅபிஷ்டமஹா கணபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி வழக்கம் போல தனது பூஜைகளை முடித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் கோயில் இரும்பு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலையில் மீண்டும் கோயிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 6 கிலோ மதிப்பிலான வெள்ளி சிலைகள், பொருள்களும், ரூ. 12,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கோயில் அறங்காவலா் வாசன் அளித்த புகாரின்பேரில், சிட்லபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com