பெருங்குடி குப்பைக் கிடங்கில் 
மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோடை கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ விபத்து தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்ப அலை வீசுகிறது. இதனால், குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா், குப்பைக் கிடங்கில் எளிதில் தீ பற்றக்கூடிய எரிபொருள்களை பிரித்து எடுக்க வேண்டும், குப்பைக் கிடங்கில் மணல் , தண்ணீா் டேங்கா் பம்புகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது மண்டல அதிகாரிகள் த. ஏ.சுந்தராஜ் , கே.மனோகரன் த. த. வெங்கடேச சிவநாதன் , எம்.வளா்மதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com