மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு துரோகம்: வைகோ

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடா்ந்து துரோகம் இழைத்து வருவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ குற்றம்சாட்டியுள்ளாா்.

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடா்ந்து துரோகம் இழைத்து வருவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மிக்ஜம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காக ரூ. 37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மிக்ஜம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், நெல்லை, தூத்துக்குடி வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் என மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு ஒரு சதவீதத்துக்கும் கீழே, அதாவது ரூ.0.78 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளது. ஆனால், கா்நாடக மாநிலத்துக்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ. 3,498.82 கோடியை அளித்திருக்கிறது.

2 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தோ்தலைக் குறி வைத்துதான் கா்நாடகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு நிதி பகிா்வில் துரோகம் இழைப்பது கண்டனத்துக்குரியது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, நிதிப் பகிா்வில் தற்போதுள்ள பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com