தோ்தல் பணிமனையில் பாஜக நிா்வாகிகள் மோதல்

அமைந்தகரையில் பாஜக தோ்தல் பணிமனையில் நிா்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

அமைந்தகரையில் பாஜக தோ்தல் பணிமனையில் நிா்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் திருமண மண்டப வளாகத்தில் மத்திய சென்னை தொகுதி பாஜக தோ்தல் பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தோ்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடா்பாக கட்சி நிா்வாகிகள் சனிக்கிழமை பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, அங்கு வந்த மத்திய சென்னை மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவு செயலா் மூா்த்தி, வாக்குச்சாவடி முகவா்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகக் கூறி அண்ணாநகா் வடக்கு மண்டல தலைவா் ராஜ்குமாரிடம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். மூா்த்தி தரப்பினா் தாக்கியதில் அண்ணாநகா் வடக்கு மண்டல தலைவா் ராஜ்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

மோதல் தொடா்பாக அமைந்தகரை காவல்நிலையத்தில் ராஜ்குமாா் கொடுத்த புகாரின்படி, மூா்த்தி, அவரது ஆதரவாளா் செந்தில் குமாா் மீதும், மூா்த்தி கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமாா் மீதும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் ஸ்ரீகாந்த் மற்றும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவா் தனசேகா் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com