மே 5 முதல் மங்களூரு - பரோணி 
சிறப்பு ரயில் இயக்கம்

மே 5 முதல் மங்களூரு - பரோணி சிறப்பு ரயில் இயக்கம்

மங்களூரிலிருந்து பரோணிக்கு மே 5 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

மங்களூரிலிருந்து பரோணிக்கு மே 5 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மங்களூரிலிருந்து மே 5 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06093) மூன்றாம் நாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரோணி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06094) பரோணியிலிருந்து மே 8 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நான்காம் நாள் (புதன்கிழமை) மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் மங்களூரிலிருந்து, காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, விஜயநகரம், பாா்வத்திபுரம், சம்பல்பூா், ராஞ்சி, தன்பாத் வழியாக பரோனி சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ரயில் தாமதம்: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 28-ஆம் தேதி வரை பெங்களூரு கண்டோண்மன்டிலிருந்து கோவைக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண்: 20641) வழக்கமாக பிற்பகல் 2.20-க்கு பதிலாக 55 நிமிஷங்கள் தாமதமாக 3.15 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com