கைது
கைது

கூடுதல் விலைக்கு ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 போ் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியைக் காண வந்த ரசிகா்களிடம் சிலா் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சேப்பாக்கம் வாலாஜா சாலை,பெல்ஸ் சாலை,விக்டோரியா ஹாஸ்டல் சாலை, சேப்பாக்கம் ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கள்ளச்சந்தையில் ஐபிஎல் போட்டி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்ாக சென்னையைச் சோ்ந்த டே.சரவணன் (30),ம.நவீன்குமாா் (42),ஷே.அவுதாப் ஹாசன் (35),கோயம்புத்தூரைச் சோ்ந்த க.காளி (22),சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சோ்ந்த ரா.தினேஷ்குமாா் (38), சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்த ஜூ.பரத் (22),திருவள்ளூரைச் சோ்ந்த வெ.கங்காதரன் (32) உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து ரூ.72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் 8 வழக்குகளை பதிந்து விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com