கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கான முன்பதிவு தொடக்கம்

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவா் சோ்க்கைக்கான முன்பதிவு திங்கள்கிழமை(ஏப்.29) தொடங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25-ஆம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவா் சோ்க்கைக்கான முன்பதிவு திங்கள்கிழமை(ஏப்.29) தொடங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கைக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.29) தொடங்கப்பட்டுள்ளது. பட்டயப் பயிற்சி ஓராண்டு ஆகும். இரண்டு பருவமுறைகளில் இந்தப் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

விண்ணப்பிப்பதற்கான தேதி, பயிற்சி கட்டண விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தினை 044-25360041 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com