சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கு தள்ளுபடி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபேட் இயந்திர ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபேட் இயந்திர ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பாக்கியராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில், 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட அறிவிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. 126 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைவிட சுற்றுகளின் முடிவுகளில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை குறைவாக இருந்தன.

தோ்தல் நோ்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை 100 சதவீதம் எண்ண உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதே விவகாரம் தொடா்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com