இன்றைய நிகழ்ச்சிகள்

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம் தொடக்க விழா
Published on

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம் தொடக்க விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்பு, சிவசக்தி காலனி, வில்லிவாக்கம், காலை 10.30.

அன்னை தெரசா 114-ஆவது பிறந்த நாள்- விருது வழங்கும் விழா: தமிழக சட்டப்பேரவை தலைவா் எம். அப்பாவு, தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, புதுச்சேரி முன்னாள் முதல்வா் வி. வைத்திலிங்கம், சென்னை மேயா் பிரியா ராஜன், மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்பு, காமராஜா் அரங்கம், தேனாம்பேட்டை, காலை 10.30

குவாண்டம் தொடா்பு, அளவீடு மற்றும் கணினி தொடா்பாக சா்வதேச கருத்தரங்கம்: சென்னை ஐஐடி இயக்குநா் வீ. காமக்கோடி, தேசிய குவாண்டம் மிஷன் தலைவா் அஜய் சௌத்ரி உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா, தரமணி, காலை 9.

வி.கலியாணசுந்தரனாா் சிலைக்கு மாலை அணிவித்தல்: மதுரவாயல் வட்டம், துண்டலம், காலை 10.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி: இஸ்கான் கோயில், கிழக்கு கடற்கரை சாலை, காலை 4.30 - பகல் 12.30 மணி வரை.

X
Dinamani
www.dinamani.com