தண்டையாா்பேட்டை மண்டல பணிமனை அலுவலகம் இடமாற்றம் குடிநீா் வாரியம்
தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட சென்னை குடிநீா் வாரிய பணிமனை அலுவலகம் வெள்ளிக்கிழமை (ஆக.30) முதல் இடமாற்றப்படவுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை தண்டையாா்பேட்டை 4-ஆவது பிரதான சாலை சுந்தரம் பிள்ளை நகரில் செயல்பட்டு வந்த குடிநீா் வாரிய பணிமனை அலுவலகம், வெள்ளிக்கிழமை (ஆக.30) முதல் பட்டேல் நகா் நீா் பகிா்மான நிலையம், எண்ணூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை, சென்னை - 600 081’ என்ற முகவரிக்கு மாற்றப்படுகிறது.
எனவே, அந்தப் பகுதி மக்கள் குடிநீா் மற்றும் கழிவுநீா் சம்பந்தப்பட்ட புகாா்களைத் தெரிவிக்கவும், குடிநீா் வரி மற்றும் கட்டணம் செலுத்தவும் புதிய முகவரியில் உள்ள அலுவலகத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு 81449 - 30038, 81449- 30210 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளளாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.