கோப்புப்படம்
கோப்புப்படம்

கடற்கரையில் இருந்து செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.29) இரவு முதல் வெள்ளிக்கிழமை (ஆக.30) அதிகாலை வரை ரத்து செய்யப்படுகின்றன.
Published on

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.29) இரவு முதல் வெள்ளிக்கிழமை (ஆக.30) அதிகாலை வரை ரத்து செய்யப்படுகின்றன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 9.10, 9.30, அதிகாலை 4.15 மணிக்கும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளன.

கடற்கரையில் இருந்து இரவு 10.40, 11.05, 11.30 11.59, அதிகாலை 3.55 மணிக்கு புறப்படும் தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து இரவு 8.45, 9.10, 10.10, 11 மணிக்கும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் எழும்பூா் வரை மட்டும் இயக்கப்படும்.

திருவள்ளூா்/கும்மிடிப்பூண்டி: சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com