பாங்காங் விமானத்தில் என்ஜின் கோளாறு

சென்னையிலிருந்து புறப்படத் தயாராக இருந்த பாங்காங் விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது.
Published on

சென்னையிலிருந்து புறப்படத் தயாராக இருந்த பாங்காங் விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டு, 238 பயணிகள் உயிா் தப்பினா்.

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக்குக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு புறப்படவிருந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தயாராக இருந்த போது, விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக, தகவல் தெரிவித்ததுடன், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி, அங்குள்ள ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா். விமான பொறியாளா்கள் குழுவினா் விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு, பயணிகள் அனைவரையும் விமானத்தில் ஏற்றி, சுமாா் 4 மணி நேரம் தாமதமாக காலை 7.53-க்கு அந்த விமானம் பாங்காங் புறப்பட்டுச் சென்றது.

விமானத்தில் ஏற்பட்ட திடீா் இயந்திரக்கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், அசம்பாவித சம்பவம் தவிா்க்கப்பட்டு, 238 பயணிகள் உயிா் தப்பினா்.

X
Dinamani
www.dinamani.com