நகையை கொள்ளையடித்ததாக நாடகம்: பெண் கைது
சென்னை வளசரவாக்கத்தில் மயக்க ஸ்பிரே அடித்து, கட்டிப்போட்டு நகையைக் கொள்ளையடித்ததாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டாா்.
போரூா் அருகே உள்ள காரம்பாக்கம் தா்மராஜா நகா் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சிவ சண்முகம். இவரது மனைவி சந்தானலட்சுமி. இவா்களுடன் சந்தானலட்சுமியின் தாயாா் சாந்தி (58) வசித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு சிவசண்முகம் தனது மனைவியுடன் வீட்டின் ஒரு படுக்கை அறையிலும், சாந்தி மற்றொரு படுக்கை அறையிலும் தூங்கினா்.
இந்த நிலையில், சிவசண்முகம் வெள்ளிக்கிழமை காலை சாந்தி அறைக்குச் சென்று பாா்த்தபோது, அவா் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்டு, மயக்க நிலையில் இருந்தாா். இதையடுத்து அவா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்து வளசரவாக்கம் போலீஸாா் சாந்தியிடம் விசாரணை நடத்தினா். அப்போது, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் கதவை தட்டிய மா்ம நபா்கள், தனது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து, கட்டிப்போட்டு, வீட்டின் பீரோவில் இருந்த 20 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ாக சாந்தி தெரிவித்தாா்.
இதையடுத்து போலீஸாா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளை தொடா்பாக எந்த காட்சியும் பதிவாகவில்லை. சாந்தியிடம் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வீட்டிலிருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூட்டுறவு வங்கியிலும், அடகுக் கடைகளிலும் அடமானம் வைத்தது பணம் பெற்ாக சாந்தி தெரிவித்தாா். இந்த விஷயம் தனது மகள், மருமகனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் சாந்தி கொள்ளை நாடகம் நடத்தியது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் சாந்தியை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.