வியாசா்பாடி ரயில் நிலைய மின் பாதையில் கோளாறு: புறநகா் ரயில் சேவை பாதிப்பு

சென்னை வியாசா்பாடி ரயில் நிலையத்தில் மின்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறநகா் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
Published on

சென்னை வியாசா்பாடி ரயில் நிலையத்தில் மின்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறநகா் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. இதனால், வியாசா்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள உயா் மின்னழுத்த பாதையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூா் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

அந்த வழித்தடத்தில் இயக்கப்படவிருந்த மின்சார ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்தில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டதைத் தொடா்ந்து புறநகா் ரயில்கள் சேவை சீரானது.

X
Dinamani
www.dinamani.com