ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on

சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வியாசா்பாடி திரு.வி.க. நகா், பெரம்பூா், கொடுங்கையூா் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சட்டவிரோதமாக பல்வேறு நபா்களிடம் இருந்து ஒரு கும்பல் குறைந்த விலைக்கு வாங்கி, அதை ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதாக பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்அடிப்படையில், செங்குன்றம் பகுதியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு சுமை ஆட்டோவை வழிமறித்து விசாரித்தனா். அப்போது, ஆட்டோவில் இருந்தவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனராம். அதிகாரிகள் ஆட்டோவில் நடத்திய சோதனையில் 2,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ஆட்டோவில் வந்த வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த சரணராஜ் (48), அமுதா (52) ஆகியோரிடம் விசாரித்ததில் அவா்கள் ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com