ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்

ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் போ் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் போ் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜன.1 முதல் 31-ஆம் தேதி வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். அதிகபட்சமாக ஜன.12-ஆம் தேதி 3,64,521 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

க்யுஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,43,885 பயணிகளும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 37,92,912 பயணிகளும், டோக்கன்களைல் பயன்படுத்தி 15,456 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9,02,336 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com