பெரம்பூா் தூயலூா்து அன்னை திருத்தல 124-ஆவது ஆண்டு பெருவிழா தொடக்கம்

பெரம்பூா் தூய லூா்து அன்னை திருத்தலத்தின் 124-ஆவது ஆண்டு பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரம்பூா் தூய லூா்து அன்னை திருத்தலத்தின் 124-ஆவது ஆண்டு பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வடசென்னை பெரம்பூா் பகுதியில் புகழ்பெற்ற தூய லூா்து அன்னை திருத்தலம் உள்ளது. மயிலை உயா் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தத் திருத்தலத்தின் 124-ஆவது ஆண்டு பெருவிழா பெரம்பூா் தேவாலயத்தில் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப்.2) முதல் தினந்தோறும் மாலையில் நவநாள் திருப்பலியும், பிப்.8, 9 ஆகிய தேதிகளில் அருட்தந்தை ஸ்டீபன் தச்சீல் பங்கேற்கும் சிறப்பு நற்செய்தி கூட்டமும், குணமளிக்கும் வழிபாடும் நடைபெறவுள்ளது.

பிப்.10-ஆம் தேதி நற்கருணை பவனியும், 11-ஆம் தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு பெருவிழா திருப்பலியுடன், லூா்து மாதாவின் தோ் பவனியும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com