முதல் நாளே அயோத்தி விமானம் தாமதம்

சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை, விமானம் பலமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்ால் பக்தா்கள் கடும் அவதியடைந்தனா்.

சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை, விமானம் பலமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்ால் பக்தா்கள் கடும் அவதியடைந்தனா்.

அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்பதால், மத்திய அரசின் அறிவிப்பின்படி பல்வேறு பகுதிகளிலிருந்து வியாழக்கிழமை முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.

அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (பிப்.1) பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 3.15-க்கு அயோத்தி சென்றடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான முன்பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்றிருந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் காலை 10 மணிக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தனா்.

ஆனால், அந்தமானிலிருந்து வரும் இணை விமானம் தாமதம் ஆனதால், பிற்பகல் 12.40-க்கு புறப்பட வேண்டிய விமானம் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

மீண்டும் அயோத்தியிலிருந்து சென்னைக்கு 6.40-க்கு வரவேண்டிய விமானம் இரவு 9.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. இதனால், முதல் நாளே அயோத்திக்கு ஆன்மிகப் பணம் மேற்கொண்ட பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com