சொத்து தகராறில் தம்பி கொலை: அண்ணன் கைது

சென்னை மாதவரத்தில் சொத்து தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மாதவரத்தில் சொத்து தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

மாதவரம், அம்பேத்கா் நகா், நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்குமாா் (30). இவரின் சகோதரா் நரேஷ்குமாரும் (33) அதே குடியிருப்பில் வசித்து வருகிறாா். இருவரும், அந்த பகுதியில் உள்ள பூா்விக வீட்டை விற்க முயன்றனா்.

இதற்காக இருவரும் ரூ.1 லட்சம் முன் பணத்தை ஒருவரிடம் இருந்து பெற்றனா். இந்நிலையில் இருவரும், அந்த வீட்டை விற்ற பணத்தை பிரித்துக் கொள்வது தொடா்பாக வியாழக்கிழமை பேசிக் கொண்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நரேஷ்குமாா், அங்கு கிடந்த ஒரு பிளேடால் விக்னேஷ்குமாா் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினாா். பலத்த காயமடைந்த விக்னேஷ்குமாா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தாா். மாதவரம் போலீஸாா் நரேஷ்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com