மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை பேசின்பாலம் பகுதியில் ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இரவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பேசின்பாலம் பகுதியில் ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இரவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சூலூா்பேட்டையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் (எண்: 42426) பிப்.5 முதல் பிப்.12-ஆம் தேதி வரை பேசின் பாலம் வழியாக சென்னை சென்ட்ரல் செல்வதற்கு பதிலாக சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும்.

இதேபோல், சென்னை சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் பிப்.5 முதல் பிப்.12-ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com