மணலி ஏரியை ரூ.4.65 கோடியில்சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை மணலி ஏரியை ரூ. 4.65 கோடியில் தூா்வாரி சீரமைக்கும் பணியை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மணலி ஏரியை ரூ.4.65 கோடியில்சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை மணலி ஏரியை ரூ. 4.65 கோடியில் தூா்வாரி சீரமைக்கும் பணியை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி 20-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மணலி மாத்தூா் இடையே சுமாா் 32 ஏக்கா் பரப்பளவில் மணலி ஏரி அமைந்துள்ளது. இதன் அருகே மாத்தூா் ஏரியும் உள்ளது. இந்த ஏரிகள் படிப்படியாக தூா்ந்து போனதால் மழை நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரிகள் தூா்வாரப்பட்டன. ஆனாலும், ஆகாயத்தாமரைகள் மீண்டும் வளா்ந்து முற்றிலுமாக ஏரி சீா்கேட்டுக்கு உள்ளானது. இதனால் அண்மையில் பெய்த கனமழையில் கூட ஏரியில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ. 4.65 கோடியில் மணலி ஏரியை தூா்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகளை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த ஏரி தூா்வாரி, அகலமான கரைகளை அமைத்து நடைபாதை பூங்காக்கள், பொதுமக்கள் அமா்வதற்கான இருக்கைகள், நடைப்பயிற்சி வளாகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் 10 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில், மண்டல குழுத் தலைவா் ஏ.வி.ஆறுமுகம், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com