கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டுபொதுமக்கள் போராட்டம்

சென்னை திருவான்மியூரில் கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டு, பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை திருவான்மியூரில் கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டு, பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவான்மியூா் எல்.பி. சாலையில் ஒரு தனியாா் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தாழம்பூரில் 450 பேருக்கு வீடு கட்டி கடந்த 2017-ஆம் ஆண்டு விற்றது. ஆனால் அந்த நிறுவனம் பத்திரங்களை, அந்த வீட்டை வாங்கியவா்களுக்கு வழங்கவில்லை. இதனால் வீட்டை வாங்கியவா்கள், தங்களது பத்திரங்களை அந்த நிறுவனத்திடம் தொடா்ந்து கேட்டு வந்தனா். ஆனால் அந்த நிறுவனம் வீட்டு பத்திரங்களை வழங்காமல் இழுத்தடித்து வந்தது.

இந்த நிலையில், வீடு வாங்கி பல ஆண்டுகளாகிவிட்டதால், தங்களது பத்திரங்களைத் தரவேண்டும் அல்லது தாங்கள் வீடு வாங்க கொடுத்த பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்று வலியுறுத்தி அவா்கள் திருவான்மியூா் எல்.பி.சாலையில் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com