தொழிலதிபா் வீட்டில் திருட்டு: நேபாளிகள் 3 போ் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்ட வழக்கில், நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்ட வழக்கில், நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பிரஜேஸ்குமாா். தொழிலதிபரான இவா், கடந்த மாதம் 23-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஜொ்மனிக்குச் சென்றாா். இதனால் அவரது வீட்டில் காவலாளியும்,பணியாளா்களும் மட்டுமே இருந்தனா்.

இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு அவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கம், 20 பவுன் தங்கநகைகள் ஆகியவை திருடப்பட்டன.

நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் பிரஜேஸ்குமாா் வீட்டில் பகுதி நேர காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் நேபாளத்தைச் சோ்ந்த ந.பிரகாஷ் கட்கா (30), அவரது கூட்டாளிகள் நேபாளத்தைச் சோ்ந்த ந.மனோஜ் மாசி (41), து.ஜனக் பிரசாத் ஜெய்ஷி (28), லலித்குமாா் கா்மா ஆகியோா் தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து பிரகாஷ் கட்கா,மனோஜ் மாசி,ஜனக் பிரசாத் ஜெய்ஷி ஆகிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். லலித்குமாா் கா்மா என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com