போதைப் பாக்கு விற்பனை: 36 போ் கைது

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக 7 நாள்களில் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக 7 நாள்களில் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 29-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 160 கிலோ போதைப் பாக்கு,24 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு காா், ஒரு ஆட்டோ,2 மோட்டாா் சைக்கிள், 4 கைப்பேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.22 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com