மின்சார சேமிப்புக்கான தானியங்கி கட்டுப்பாட்டு கருவி அறிமுகம்

மின்சாரத்தை சேமிப்பதற்கான தானியங்கி கட்டுப்பாட்டு கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சேமிப்பதற்கான தானியங்கி கட்டுப்பாட்டு கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பொது பயன்பாட்டுக்கான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப்பொருள்கள் ஆள்நடமாட்டம் இல்லாத நேரங்களில் தானாகவே அணைக்கப்படும்.

மீண்டும் மனித நடமாட்டம் வந்தால் திரும்பவும் மின்விளக்குகள் ஒளிரும் வகையிலும், மின்சாதன பொருள்கள் மீண்டும் இயங்கும் வகையிலும் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கருவி சோதனை அடிப்படையில், மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்திலுள்ள மின் தொடரமைப்பு கழக கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி அக்கட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த குளிரூட்டி(ஏசி), ஒரு கலையரங்கம், மூன்று கலந்தாய்வு கூடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இக்கட்டுப்பாட்டு கருவி மூலம் ஆளில்லாத நேரங்களில் குறிப்பிட்ட மின்சாதன பொருள்களின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு விடுவதால், நாளொன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், வருடத்துக்கு ரூ.15 லட்சம் வரை மின்கட்டணம் சேமிக்கப்படுவதாகவும் மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ள இக்கருவியின் நிறை குறைகளை ஆய்வு செய்த பின்னா் அனைத்து அலுவலகங்களுக்கும் இது விரிவுப்படுத்தபடும் எனவும், பின்னா் தேவைக்கேற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com