இலங்கையால் விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனா்.


சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 12 மீனவா்கள் கடந்த ஜன.13-ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை கைது செய்தது. சிறையில் இருந்த மீனவா்களை விடுவிக்க, மத்திய, மாநில அரசு இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. அதைத்தொடா்ந்து 12 மீனவா்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.

பின்னா், 12 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்களை மீன்வளத் துறை அதிகாரிகள், தமிழக பாஜக மீனவப் பிரிவு தலைவா் முனுசாமி உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வரவேற்றனா். தொடா்ந்து, 12 மீனவா்களும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com