122 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,போலீஸôரை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல் துறைக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல் துறை, தாம்பரம் மாநகர காவல் துறை, ஆவடி மாநகர காவல் துறையில் ஆகிய 3 மாநகர காவல் துறையில் பணிபுரியும் 62  ஆய்வாளர்கள் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதன் அடுத்த கட்டமாக மேலும் 122 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்தும், காவல் நிலையங்களில் நியமனம் செய்தும் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதேபோல பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த 16 உதவி ஆணையர்களையும் புதிய பணியிடங்களில் நியமனம் செய்தும் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். 
புதிய பொறுப்பை உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் ஓரிரு நாள்களில் ஏற்பார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com