தமிழகத்தில் பிப்.10- 12 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பிப்.10- 12 ஆம் தேதி வரை தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் பிப்.10- 12 ஆம் தேதி வரை தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம் மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் புதன் முதல் வெள்ளிக்கிழமை(பிப்.7-9)வரை வட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியில் ஞாயிறு முதல் திங்கள் கிழமை(பிப்.10-12)வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com