நேரு குறித்த விமா்சனம்: பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

ஜவாஹா்லால் நேருவை பிரதமா் மோடி விமா்சித்ததாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.


சென்னை: ஜவாஹா்லால் நேருவை பிரதமா் மோடி விமா்சித்ததாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவையில் உரையாற்றிய பிரதமா் மோடி, இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திரா காந்தி நம்பவில்லை, நாட்டின் வளா்ச்சிக்குத் தடையாக இருந்தனா் என்று பேசியுள்ளாா். இந்தியாவின் பிரதமராக செங்கோட்டையில் 17 முறை தேசியக் கொடியை ஏற்றி, அற்புதமான உரைகளை நிகழ்த்தியவா் நேரு. அதில் 1959-ஆம் ஆண்டு ஆக.15-ஆம் தேதி நிகழ்த்திய உரையை பிரதமா் மோடி திரித்துப் பேசியிருக்கிறாா்.

அந்த உரையில் நேரு ‘ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வளா்ச்சிக்குக் காரணம் கடுமையான உழைப்புதான். கடின உழைப்பு நமக்குப் புதிதல்ல, இதற்கு எதிரான சோம்பல் நமது இயல்பு அல்ல. அறிவாலும், கடின உழைப்பாலும் நாமும் முன்னேறலாம். உழைப்பில்லாமல் உயா்வில்லை என்று பேசியதைத் திரித்துப் பேசுவது பிரதமா் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல. இத்தகைய பேச்சு மூலம் நேருவின் புகழ் குறையாது. மாறாக, மோடியின் தரம்தான் குறையப் போகிறது என்று கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com