ஜெ.பி.நட்டாவின்பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

சென்னையில் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு போக்குவரத்துக் காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.


சென்னை: சென்னையில் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு போக்குவரத்துக் காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.

தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் கொங்கு மண்டலத்தில் நிறைவு பெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவும் தமிழகத்துக்கு வரவுள்ளனா்.

அதற்கு முன்னதாக சென்னையில் பிப். 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கலந்து கொள்ளவுள்ளாா்.

இந்தக் கூட்டம் நடத்துவதற்கு பெருங்குடி, சோழிங்கநல்லூா் மற்றும் நந்தனம் ஆகிய 3 இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை காவல் துறையினா் அனுமதி வழங்கவில்லை. தற்போது ஷெனாய் நகா் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு பாஜக சாா்பில் காவல் துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com