பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னை: பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னை மாநகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொடுங்கையூா் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் சேகரிக்கப்பட்டு ‘பயோமைனிங்’ முறையில் அகற்றப்படுகிறது.

இந்த நிலையில் பெருங்குடியில் குப்பை கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, வீடுகள் தோறும் சேகரிக்கும் குப்பையை விரைவாக பிரித்தெடுத்து அகற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆலந்தூா் மண்டலத்தில் உள்ள சென்னை பள்ளியில் ஆய்வு செய்த ஆணையா், பாடத்தை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்குமாறு அறிவுறுத்தினாா். லாயிட்ஸ் காலனியில் புதிதாக அமைக்கப்படும் விலங்கு கருத்தடை மையம், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ராயபுரம் மாடிப்பூங்கா புதுப்பிக்கும் பணி ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com