எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவில் பன்னடுக்கு வாகன நிறுத்தம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 
சென்னை எழும்பூர், காந்தி-இர்வின் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம்.
சென்னை எழும்பூர், காந்தி-இர்வின் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம்.

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் "அம்ரூத் பாரத் ரயில் நிலையம்'  திட்டத்தின் கீழ் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஹைதராபாதை சேர்ந்து நிறுவனம் ரூ.734.91 கோடியிலும், திட்ட மேலாண்மையை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ரூ.14.56 கோடி செலவிலும் மேற்கொண்டு வருகிறது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத்தரத்தில் மேம்படுத்தும் பணி 2022}இல் தொடங்கப்பட்டது. இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் நிலையத்தின் இருபுறமும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டு வருகிறது. இதில் காந்தி}இர்வின் சாலையில் வாகன நிறுத்தம் அடித்தளம் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 

பூந்தமல்லி சாலை பகுதியில் அமையவுள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரயில் நிலையத்தின் மற்ற பகுதியை மேம்படுத்தும் பணி  காரணமாக அங்குள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளன. 

இதற்காக அங்கு செயல்படும் அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்றும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வருகை, புறப்பாடு முனையம் பணி மேற்கொள்ளவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. 

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில், பெருநகர சென்னை மாநகராட்சி, மின்சார வாரியம், சுற்றுச்சூழல் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பிறதுறைகளிடம் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com