கோடம்பாக்கம் ஏ.வி.எம் மயானம் இன்று முதல் இயங்காது

கோடம்பாக்கம் ஏ.வி.எம்.மயானம் பராமரிப்பு பணி காரணமாக வியாழக்கிழமை (பிப்.8) முதல் செயல்படாது.

கோடம்பாக்கம் ஏ.வி.எம்.மயானம் பராமரிப்பு பணி காரணமாக வியாழக்கிழமை (பிப்.8) முதல் செயல்படாது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை, கோடம்பாக்கம் மண்டலத்தின் 135-ஆவது வாா்டில் உள்ள ஏ.வி.எம். மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் மயானம் பிப்.8 முதல் பிப்.27-ஆம் தேதி வரை இயங்காது. பொதுமக்கள் இந்த நாள்களில் அருகிலுள்ள நெசப்பாக்கம், கண்ணம்மாபேட்டை மயானங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com