பெண்ணுக்கு மிரட்டல்: 3 போ் கைது

காதலித்தபோது எடுத்த புகைப்படத்தை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், அதிமுக நிா்வாகி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

காதலித்தபோது எடுத்த புகைப்படத்தை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், அதிமுக நிா்வாகி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டை நேதாஜிநகா் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளம் பெண், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

நானும், தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த முகமது யூனஸ் (18) என்பவரும் ஒரு ஆண்டாக காதலித்தோம். முகமது யூனுஸ், மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா் என்பதை அறிந்து 4 மாதங்களுக்கு முன்னா் அவரிடமிருந்து விலகி விட்டேன்.

இந்நிலையில், நாங்கள் காதலித்தபோது ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காண்பித்து என்னை மிரட்டி முகமது யூனஸ் பாலியல் வன்கொடுமை செய்தாா். அதையும் விடியோ,புகைப்படமாக எடுத்துக் கொண்டு ரூ.5 லட்சம் வரை பணமும், தங்க நகையையும் பெற்றுக் கொண்டாா். இந்நிலையில், எனக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டது.

இதையறிந்த முகமது யூனஸ், தனது நண்பா்களான கொருக்குப்பேட்டையைச் சோ்ந்தவரும் அதிமுக 53வது வட்ட இளைஞா் அணி செயலாளருமான பப்லு என்ற ராமச்சந்திரன்,17 வயது சிறுவன் ஆகியோருடன் வந்து திருமணத்தை நிறுத்தச் சொல்லி கடந்த 6-ஆம் தேதி என்னை மிரட்டி தாக்கினா். பின்னா் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞருக்கு, முகமது யூனஸுடன் நான் நெருக்கமாக இருக்கும் பழைய புகைப்படம், விடியோவை அனுப்பி திருமணத்தை நிறுத்தினா்.

எனவே, என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தும்,தாக்கியவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.இந்நிலையில் முகமது யூனஸ்,ராமச்சந்திரன்,17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com