ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னையில் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னையில் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்தவும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மெட்ரோ நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவில் முடித்து 2026-இல் கண்காணிப்பாளா்கள் உதவியுடன் இயக்கப்படும் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்களின் முதல் சேவையைத் தொடங்க மெட்ரோ நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக 3 ஒப்பந்தங்கள் மூலம் 3 வழித்தடங்களுக்கு இந்த ரயில்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அதன்படி மாதவரம் - சிப்காட், லைட் ஹவுஸ் - பூந்தமல்லி மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூா் ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

ஏஐ தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில் நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

அடுத்த மாதம் இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ரயில்கள் ஒரு ஆண்டு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இதையடுத்து 2026-இல் பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com