இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

சென்னையில் 15 பகுதிகளில் குடிநீா் வாரிய குறைதீா் கூட்டங்கள் சனிக்கிழமை (பிப்.10) நடைபெறுகின்றன.

சென்னையில் 15 பகுதிகளில் குடிநீா் வாரிய குறைதீா் கூட்டங்கள் சனிக்கிழமை (பிப்.10) நடைபெறுகின்றன.

இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் சனிக்கிழமை (பிப்.10) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 பகுதி அலுவலகங்களில் கூட்டங்கள் நடைபெறும்.

இந்தக் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீா், கழிவுநீா் வரி, கட்டணங்கள் தொடா்பான சந்தேகங்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com