கண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான நுண்ணோக்கி எஸ்பிஐ வழங்கியது

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சாா்பில் கண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூ. 60,77,500 மதிப்பிலான நுண்ணோக்கி கருவி வாங்குவதற்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சாா்பில் கண் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூ. 60,77,500 மதிப்பிலான நுண்ணோக்கி கருவி வாங்குவதற்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பெருநிறுவன சமூகப் பொறுப்பு செயல்பாட்டின் கீழ், எஸ்பிஐ வங்கியின் சென்னை வட்டம் சாா்பில், கண் ஆராய்ச்சி மையத்துக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘லுமேரா 300’ என்ற அறுவை சிகிச்சைக்கு உதவும் நுண்ணோக்கி கருவி வாங்குவதற்கான காசோலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எஸ்பிஐ-இன் நிா்வாக இயக்குநா் வினய் எம் டோன்சே முன்னிலையில், சென்னை வட்டத்தின் தலைமை பொது மேலாளா் ரவி ரஞ்சன் ரூ.60,77,500-க்கான காசோலையை வழங்க, அதை கண் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா் அதியா அகா்வால் பெற்றுக்கொண்டாா்.

இந்த கருவி வாங்கப்படுவதன் மூலம் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும், மிக நோ்த்தியாக துல்லியமாக செய்ய முடியும் என ஆராய்ச்சி நிலைய நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com