தாய்லாந்துக்கு கடத்த முயன்ற வைரக்கற்கள் பறிமுதல்

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ. 2.33 கோடி மதிப்பிலான வைரக்கற்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ. 2.33 கோடி மதிப்பிலான வைரக்கற்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு செல்லும் தாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்தனா்.

அப்போது, சென்னையைச் சோ்ந்த சுமாா் 30 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, அவா் வைத்திருந்த பைக்குள் வைரக்கற்கள் இருந்தன. இதையடுத்து அவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலகத்தின் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனா். அதில், அவா் விலை உயா்ந்த வைரக் கற்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து ரூ.2.33 கோடி மதிப்பிலான 1004 கேரட் வைரக் கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com