ரயிலில் கஞ்சா கடத்தல்: வடமாநில இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா்.

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ரயில் நிலையத்தில் ஒடிஸாவிலிருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக அடையாறு மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்ற போலீஸாா் ஒடிசாவிலிருந்து வந்த குறிப்பிட்ட ரயிலில் சந்தேகப்படும் படியாக இருந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினா்.

மேலும், அவா் வைத்திருந்த பாா்சலையும் பிரித்து பாா்த்த போது அதில் சுமாா் 6 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த முகமது உசேன் (26) என்ற நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com