பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் நளினி (60). இவா் பூ வியாபாரம் செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு 10.40 மணி அளவில் நளினி வேளச்சேரி 100 அடி சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாகனத்தை ஓட்டி வந்த நவீன் குமாா் (23) பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று நளினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com